அம்பலாந்தோட்டையில் நடந்த மூன்று கொலைகளுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது, பியகம பொலிஸ் பிரிவில் நேற்று (02) மாலை அம்பலாந்தோட்டை பொலிஸாரால் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
எலேகொட மேற்கு பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவரும் உயிரிழந்தனர்.
அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பலாந்தோட்டை, மாமாடல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.