செம்மணி மனித புதைகுழியில் இரண்டு பெரிய என்புக்கூட்டு தொகுகளின் முழங்கால்
பகுதிக்கு குறுக்காக ஒப்பீட்டளவில் சிறிய எலும்புக்கூட்டு தொகுதியும்
மற்றுமொரு என்புக்கூட்டின் மண்டையோடு ஒரு என்புக்கூட்டின் தோள்பட்டையுடன்
தொடுகையுற்றவாறும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நான்கு என்புக்கூட்டு தொகுதிகளையும் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை இன்றையதினம் முற்றாக அகழ்ந்து எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இதுவரையில் 231 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


