புதிய இணைப்பு
பொரளை பொது மயானத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் கைது செய்யப்பட்ட மரங்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின், சாரதி கஞ்சா பாவித்திருந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையிலே குறித்த சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு – பொரளை மயான சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவம் தொடர்பில் மரங்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை மயானத்திற்கு அருகில் இன்று (28) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மரங்களை ஏற்றிச் சென்ற கிரேன் பல வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
இந்த விபத்தில் 62 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்து தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மரங்களை ஏற்றிச் சென்ற வாகனம் பிரேக் கட்டமைப்பு செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விபத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

