மட்டக்களப்பு (Batticaloa) முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் கடற்றொழிலாளர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவமானது இன்றையதினம் (13.12.2024) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
முகத்துவாரம் பகுதியில் இருந்து இயந்திர படகு ஒன்றில் கடற்தொழிலுக்கு நேற்று (12.12.2024) இரவு இருவர் சென்று மீன் பிடித்துவிட்டு மீண்டும் சம்பவதினமான இன்று காலை 8 மணியளவில் முகத்துவராம் கரைப்பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தபோது படகு திடீரேன கழிந்துள்ளது.
படகு கழிந்ததையடுத்து ஒருவரை காப்பற்றப்பட்டதுடன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
திராய்மடு முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளையின் தந்தையான கோடீஸ்வரன் வேணுராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.