பிள்ளையான் (
Pillayan) எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு நெருக்கமானவர் என கூறப்படும் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிள்ளையானினால் திட்டமிட்டதாகக் கூறப்படும் பல கொலைகளில் துப்பாக்கிதாரியாக செயற்பட்டவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.