வவுனியாவில் (Vavuniya) காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியா – கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் நேற்றிரவு (19) இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் நேற்றிரவு அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது
வீதிக்கரையில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
சம்பவத்தில் கண்னாட்டி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சுப்பிரமணியம்
என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பறையனாலங்குளம் காவல்துறையினர்
முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

