கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகளும் இரண்டாவது முறையாக
திறக்கப்பட்டுள்ளது .
கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இன்று (14) நான்கு வான்
கதவுகளும் ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும் கன மழை
காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 98,895 கன அடியாக உயர்ந்துள்ளது.

தற்போது வினாடிக்கு 750 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாகவும் கந்தளாய்
நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தின் தாக்கமாக, கந்தளாய் பகுதியில் நேற்று முதல் தொடர்ந்து
அடைமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.

