தற்போது நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால், இரணைமடுக் குளத்தில் நீர்வரத்து
அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கில், இரணைமடு குளத்தின் வாயில்கள்
இன்றையதினம் திறக்கப்பட்டது.
நான்கு வான் கதவுகள் 6 இஞ்சி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு வேண்டுகோள்
இதனால் குளத்தின்
கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இன்று (01) பத்து வான் கதவுகளும் அரை அடிக்கு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும். இந்த கொள்ளளவுக்கு நீரின் கொள்ளளவு தற்போது உயர்ந்துள்ளதுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கிய வயல் நிலங்கள்
தற்போது
வினாடிக்கு 1000 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாகவும் கந்தளாய் நீர்பாசன
பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அலுத்ஓயா குளத்தின்
நீர்மட்டம் 8 அடியாக உயர்ந்துள்ளதால், அதனுடைய ஆறு வான் கதவுகள் அரை அடி
அளவுக்கு திறக்கப்பட்டுள்ளதாக அதன் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு
வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால், அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த
நூற்றுக் கணக்கான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை
தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.