எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கான மாவட்டதிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியாது என்ற அச்சம் உள்ள வாக்காளர்கள் வேறு வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதி கோரலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள், சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு ஒரு திட்டத்தை உருவாக்க முடியும் என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பதிவு செய்யப்பட்ட வாக்காளர் ஒருவர் வாக்களிக்க அனுமதி கோரி தேர்தல் ஆணையரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பப் படிவம்
இந்த விண்ணப்பங்களை தேர்தல்கள் ஆணைய அலுவலகத்திலோ அல்லது ஒருவர் வசிக்கும் மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகத்திலோ சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 2024 ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் விண்ணப்பப் படிவங்களில் தொடர்புடைய விவரங்களைச் சேர்க்க வேண்டும்.
மேலும், உரிய விண்ணப்பப் படிவங்களை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.