சபாநாயகருக்கு வாயைமூடி தான் கதைப்பதை கேட்டுக் கொண்டிருக்குமாறு கைநீட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகி சிறிது நேரத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்திற்கு பக்கச்சார்பாக
இந்நிலையில், கோபமடைந்த சபாநாயகர் நீங்கள் யாருக்கு கதைக்கிறீர்கள். ஒழுக்கமாக கதைக்கவும் என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சபை அமர்வில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது பிரதியமைச்சர் வசந்த எழும்பி, இது பாடசாலை என்று நினைத்து கொண்டிருந்தால் ஆசிரியராக கூட இருக்க இவர் தகுதியற்றவர். அவரின் பேச்சை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி பேசும் போது அவரை கதைக்க விடாமல் சபாநாயகர் தடுத்தால் அவர் கடும் தொனியில் நீங்கள் அரசாங்கத்திற்கு பக்கச்சார்பாக நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த குழப்ப நிலை 5 நிமிடம் வரை நீடித்தமை குறிப்பிடத்தக்கது.