கிளிநொச்சி வடக்கு வலய ஆசிரியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இடைநிறுத்தும் இடைக்கால தடைக்கட்டளை கிளிநொச்சி
நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலய ஆசிரியர் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தால்
வழங்கப்பட்ட இடமாற்றம் முறையற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்கு
வழங்கப்பட்ட இடமாற்ற கட்டளைக்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரியும், குறித்த
இடமாற்ற கடிதத்தை இரத்து செய்யுமாறு கோரியும், எழுத்தாணை மனு கிளிநொச்சி
மேல் நீதிமன்றில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனால் ஆசிரியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால தடைக்கட்டளை
குறித்த வழக்கின் விசாரணை நேற்று (21.10.2025) மாலை 2.00 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது.

இதன்போது, சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் முன்வைத்த
சமர்ப்பணங்களின் அடிப்படையில், குறித்த ஆசிரியருக்கு வடக்கு மாகாண கல்வி
திணைக்களத்தால் கிளிநொச்சி வடக்கு வலயத்துக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இடைநிறுத்தும் இடைக்கால தடைக்கட்டளை நீதிபதி T.அலெக்ஸ் ராஜாவால்
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 03.11.2025ஆம்
திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

