வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, மற்றும் கடுவெல மாநகர சபை மேயர் ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. .
குறித்த உத்தரவானது, கல்கிசை நீதவான் ஏ.டி. சத்துரிகா டி சில்வாவினால் இன்று (25) கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு பிறப்பிக்கப்பட்டது.
தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடத்தை 3.6 மில்லியன் ரூபாவுக்கு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பத்திர பதிவு செய்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக இந்த வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை ஆவணங்கள்
விசாரணையின்போது கண்டறியப்பட்ட ஆவணங்கள், கொழும்பு மோசடி விசாரணைப் பணியக அதிகாரிகளால் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்னவால் சான்றளிக்கப்பட்ட 35 மேலதிக ஆவணங்களும் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அதன்படி, வழக்கு ஒகஸ்ட் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.