இலங்கையில் அச்சு, இலத்திரனியல், இணையதள மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கென அமைப்பொன்றை உருவாக்கும் வகையில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
குறித்த கூட்டமானது, நாளையதினம்(16.02.2025) காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெறவுள்ளது.
இதர ஊடக அமைப்புகளில் அங்கம் வகிக்காத, ஊடகவியலாளர்களுக்கெனத் தனித்துவத்துடன்
இயங்கு நிலையில் செயற்பட வேண்டிய அமைப்பின் அவசியத்தை விரும்பும், துணிந்து
செயற்படக்கூடிய ஊடகவியலாளர்கள் இதில் கலந்துகொள்ளுமாறு இந்தக் கூட்டத்தை
ஏற்பாடு செய்துள்ள சிரேஷ்ட ஊடகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
தமிழ் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கும் அரசியல் பின்னணி
அற்ற அமைப்பின் தேவை காலத்தின் கட்டாயம் என்றும் அவர்கள் மேலும்
சுட்டிக்காட்டுகின்றனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகச் செய்தியாளர்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும்
உள்ள ஊடகர்கள் நிச்சயம் இதில் கலந்துகொள்ளுங்கள் என்றும் அவர்கள் அழைப்பு
விடுத்துள்ளனர்.