பிரதான கட்சி ஒன்றின் துண்டுப் பிரசுரத்தை வாங்க மறுத்த வர்த்தகர் ஒருவரை கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் தாக்குவது கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று (15) காலை 11 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கட்சியொன்றின் அமைப்பாளரும் அவரது ஆதரவாளர்களும் கடைக்குள் வந்து அந்த இளைஞனிடம் துண்டு பிரசுரத்தை கொடுத்தனர், அந்த இளைஞன் அதனை வாங்க மறுத்ததால், அமைப்பாளர் கோபமடைந்து அந்த இளைஞனைத் தாக்கினார், பின்னர் அவரது கையைப் பிடித்து மிரட்டினார்.
உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்
இளைஞனை தாக்கியதையடுத்து, அமைப்பாளருடன் வந்த அக்கட்சியின் ஆதரவாளர்கள் தேர்தலில் “உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என அந்த இளைஞரை மிரட்டியுள்ளனர்.
நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதி
தாக்குதலின் பின்னர், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன், சிகிச்சை பெற்று, தனது எதிர்கால பாதுகாப்புக்காக அந்த வைத்தியசாலையில் உள்ள காவல்துறையில் முறைப்பாடு செய்து இன்று (16) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞனின் கடை இன்று (16) மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.