குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஒரு தனியார்
நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட நிலையில், அதன் மூலம் அரசுக்கு எவ்வித
வருமானமும் கிடைக்கவில்லை என்று கணக்காய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.
மாறாக, விசா கட்டண விலக்கு பிரிவின் கீழ் தகுதி பெற்ற சுற்றுலாப் பயணிகளும்
செயலாக்கக் கட்டணங்களைச் செலுத்தினர்,
இதனால் அவர்கள் இலவச சேவையிலிருந்து பயனடையவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கை
தெரிவித்துள்ளது.
செலவு – செயல்திறன்
விசா வழங்கலைக் கையாளும் குறுகிய கால நடவடிக்கைகளில், GBS Technology
Services & IVS Global ± FZCO மற்றும் VFS VF Worldwide Holdings Ltd ஆகியவை
ஏப்ரல் 17, 2024 மற்றும் ஆகஸ்ட் 2, 2024க்கு இடையில் இணையம் மூலம்
வழங்கப்பட்ட விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையிலிருந்து குறைந்தபட்சம்
1,820,418 ரூபாயை சம்பாதித்திருக்கலாம் என்று கணக்காய்வு அறிக்கை
மதிப்பிட்டுள்ளது.

எனினும், விசா கட்டண விலக்கு முறையின் கீழ் அரசுக்கு எவ்வித வருமானங்களும்
கிடைக்கவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், அவுட்சோர்ஸ்
செய்யப்பட வேண்டிய சேவைகள் குறித்து செலவு – செயல்திறன் ஆய்வை நடத்தி, முறையான
கேள்விப்பத்திர நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அத்துடன், அத்தகைய திட்டங்களை மேற்கொள்வதற்கு முன், அரசாங்கத்திற்கு லாபகரமான
மற்றும் நாட்டிற்கு நன்மை பயக்கும் நிபந்தனைகளைக் கொண்ட நிறுவனங்களைத்
தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

