முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் மருந்தக கடை உரிமையாளரின் அடாவடி : காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் (Jaffna) மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த கடை உரிமையாளரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது  இன்று (01) யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின்
உணவு கட்டுப்பாடு நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர்
மருந்தகத்தின் அனுமதி தொடர்பாக மருந்தகமொன்றை சோதனையிட சென்றுள்ளனர்.

கடை உரிமையாளர் 

சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கும் போது அதிகாரிகளை கடை உரிமையாளர் மருந்தகத்திற்குள் வைத்து பூட்டி அச்சுறுத்தியுள்ளார்.

யாழில் மருந்தக கடை உரிமையாளரின் அடாவடி : காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை | Owner Of Pharmacy Was Arrested In Jaffna

இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு அரச அதிகாரிகளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குற்றத்தடுப்பு பிரிவு

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் அனுமதியின்றி மருந்து விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கடை உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

யாழில் மருந்தக கடை உரிமையாளரின் அடாவடி : காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை | Owner Of Pharmacy Was Arrested In Jaffna

மேலும், சந்தேகநபரை யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தும் காவல்துறையினர், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்