விவசாயிகளிடமிருந்து நாளை முதல் நடைமுறையாகும் வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல் கொள்வனவு செய்யப்படும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(05.02.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
நெல் கொள்வனவு விலை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது“நாடு நெல் கிலோவொன்று 120 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோவொன்று 125 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும்.
அதேநேரம், கீரி சம்பா நெல் கிலோவொன்று 132 ரூபாவுக்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும்”என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.