முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காஷ்மீரில் ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் : வலுக்கும் மோதல்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் ஆயுதங்களை குவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்ற காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதற்கு பெரும்பாலான உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

தூதரக அதிகாரி

அத்தோடு, அனைத்து நாடுகளின் தூதரக அதிகாரிகளை அழைத்து இந்திய அரசு பிரச்னையின் தாக்கம் குறித்து விளக்கியது.

இதில், இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன.

காஷ்மீரில் ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் : வலுக்கும் மோதல் | Pakistan Masses Weapons Near Kashmir Border

இதனிடையே, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு கட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதனால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் மூண்டுள்ள நிலையில் இந்தியாவும் தனது முப்படைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய விமானப்படை விமானங்கள் போர் ஒத்திகை பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் இதற்காக இரண்டு ரபேல் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இராணுவ ஆயுதங்கள்

இந்தநிலையில், இந்தியா தங்கள் நாட்டின் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதிகளில் இராணுவ ஆயுதங்களை குவித்து வருகின்றது.

இதற்காக இராணுவ வாகனங்களில் பீரங்கி உள்ளிட்ட பெரிய பெரிய இராணுவ ஆயுதங்களை ஏற்றி கிராமங்கள் வழியாக சென்று நாட்டின் எல்லைப் பகுதியான ராவல்பிண்டி, காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் குவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காஷ்மீரில் ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் : வலுக்கும் மோதல் | Pakistan Masses Weapons Near Kashmir Border

மேலும், இராணுவ ஆயுதங்கள், தளவாடங்களை பாகிஸ்தான் இராணுவம் வாகனங்களில் எல்லைகளை நோக்கி கொண்டு செல்வதை அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காணொளி எடுத்து சமூக வளைதலங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்தநிலையில், தற்போது இந்த காணொளி வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.