முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காட்சி மாற்றம் ஏற்பட்ட பரந்தன் சந்தி


Courtesy: uky(ஊகி)

கிளிநொச்சி (Kilinochchi) பரந்தன் சந்தியில் இருந்த சிலையை அகற்றிவிட்டதால் காட்சி மாற்றம் ஏற்பட்ட பரந்தன் சந்தியை பார்க்க கவலையளிப்பதாக ஈழ ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பரந்தன் சந்தியின் தற்போதைய
தோற்றம் கண்கவர் முறையில் இல்லை.அதனை மென்மேலும் கவர்சிகரமானதாக மாற்ற முயலலாம்.

முல்லைத்தீவுக்கான A35 பாதையினால் முல்லைத்தீவு நகரை A9 பாதையுடன் இணைத்து விடுகின்ற வகையில் பரந்தன் சந்தியின் அமைவு இருக்கின்றது.

முல்லைத்தீவினை நினைவுபடுத்தும் வகையில் அதன் கம்பீரத்தை எடுத்துரைக்கும் வகையில் பரந்தன் சந்தியில் மன்னன் பண்டாரவன்னியன் சிலையிருந்தால் கூட நன்றாக இருக்கும் என அவர்களின் கருத்தாடல்கள் இருந்தன.

பரந்தன் சந்தியின் கம்பீரம்

பரந்தன் சந்தியில் 2009இற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் பீரங்கிப்படையணி ஒன்றினை நினைவுபடுத்தும் வகையில் சிலை வைக்கப்பட்டு அதன் மீது கூடாரமும் அமைக்கப்பட்டிருந்தது.

paranthan-junction-where-the-scene-changed

குட்டிச்சிறி மோட்டார் படையணியின் நினைவாக குட்டிச் சிறியின் உருவச்சிலையும் மோட்டார் பீரங்கி ஒன்றின் சிலையும் இணைந்த நிலையில் சிலையமைப்பு இருந்தது.

பரந்தன் சந்தியில் இந்த சிலை ஒரு சுற்றுவட்டப்பாதையை அமைப்பது போல இருக்கும் அதேவேளை இன்றுள்ள பாதையின் அதே பயணத் தோற்றப்பாட்டைப் போலவே அன்றும் இருந்திருந்தது எனவும் அவர்களில் இருந்த முதியவர் ஒருவர் தன் நினைவுகளை மீட்டியிருந்தார்.

இப்போது பரந்தன் சந்தியில் உள்ள மின்கம்பம் இருந்த இடத்தில் முன்னார் அந்த சிலை இருப்பது போன்ற எண்ணத் தோற்றம் தனக்கிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேடையும் அதன் மீது சிலையும் சிலையினை வெய்யிலில் இருந்து காப்பது போல் அமைக்கப்பட்ட சீமெந்து கூடாரமும் கம்பீரமான உணர்வை ஏற்படுத்தி விடுவதில் ஒரு முறை தானும் தவறியதில்லை என மற்றொரு முதியவர் குறிப்பிடுகின்றார்.

வீரத்தின் குறியீடாக மிடுக்கான எண்ணத் தோன்றல்களை ஏற்படுத்தி விடுவதாக அந்த சிலையமைப்பு இருந்திருந்தது என்றால் மிகையாகாது.பரந்தன் சந்தியின் சுற்றுச் சூழல் கூட தூய்மையானதாகவே இருந்ததாக தனக்கு நினைவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சிலை எங்கே?

2009 போர் முடிந்த பின்னர் விடுதலைப்புலிகளை நினைவுபடுத்தும் எத்தகையதொரு அடையாளங்களும் தாயகப் பரப்பில் இருக்க கூடாது என்ற எண்ணத்துடன் இயங்கிய இலங்கை இராணுவம் அந்தச் நிலையினை அகற்றி விட்டதாக பரந்தனை வாழிடமாக கொண்டிருந்த வயோதிபர் ஒருவருடன் உரையாடியதன் மூலம் அறிய முடிகிறது.

paranthan-junction-where-the-scene-changed

ஆயினும் 2009 மீள் குடியேற்றம் நடந்த பின்னும் சில காலம் அந்த சிலைகள் உடைக்கப்பட்ட நிலையில் கூடாரம் இருந்தது.
வீதியபிவிருத்தியோடு எல்லாம் மறைந்து விட்டது.இப்போது பலருக்கு பரந்தன் சந்தியின் சிலையும் மறந்து விட்டது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழர்களின் மனங்களில் வரலாறாக கடந்த கால நிகழ்வுகள் இருக்கும் போது தான் தற்கால நிகழ்வுகளுக்கூடாக தாம் எந்தளவுக்கு சிதைக்கப்பட்டு தங்கள் பாரம்பரியம் மாற்றப்பட்டு விடுகின்றது என்பதை உணர முடியும்.

இளம் சந்ததியினரின் எதிர்காலம் மீண்டும் முன்னைய வரலாற்றை தேடுமளவுக்கு இட்டுச் சென்று விடக்கூடாது என்றால் இது போன்ற சிறிய சிறிய நினைவுகளை பேணிக் கொள்ளல் அவசியமாகிறது.

நினைவுகளை அழித்தல் 

வன்னியில் இது போல் பல சிலைகளும் நினைவிடங்களும் அழிக்கப்பட்டு இருக்கின்றன.

paranthan-junction-where-the-scene-changed

ஆனாலும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்களை அழித்து அவர்களது நினைவுகளை மக்கள் மனங்களில் இருந்து அழிக்க முயலும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு வியப்பளிக்கின்றது.

விடுதலைப்புலிகளின் முகாம்கள் இருந்த இடங்களில் இப்போது இராணுவ முகாம்களை அமைத்திருக்கின்றனர்.அந்த முகாம்களை பார்க்கும் போது விடுதலைப்புலிகளின் முகாம்கள் இருந்தது நினைவுக்கு வந்து விடுவதை அந்த இராணுவ முகாம்கள் தூண்டி விடுகின்றன.

கிளிநொச்சி நகரில் உள்ள பல இராணுவ மற்றும் பொலிஸ் செயற்பாட்டு மையங்கள் முன்னர் விடுதலைப்புலிகளின் முகாம்கள் இருந்த இடங்களாக இருப்பதனையும் சுட்டலாம்.

உண்மையில் விடுதலைப்புலிகளின் நினைவுகளை மக்கள் மனங்களில் இருந்து அழிப்பது என்றால் இராணுவ மயமாக்கலுக்குள் வாழ்வதான சூழல் தமிழ் மக்களிடையே இருக்காது பார்க்க வேண்டும் என சமூக உளநல ஆலோசகர் ஒருவருடன் நினைவழிப்புக்கள் தொடர்பில் மேற்கொண்ட கேட்டலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

புளியம்பொக்கணை நாகதம்பிரான் சிலை 

இன்றைய சூழலில் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களை பாதுகாக்கும் பொருத்தப்பாடான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கூடியளவு கவனமெடுக்க வேண்டும்.

paranthan-junction-where-the-scene-changed

யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் தமிழார்வ உணர்வுகளை தந்து விடும் வீதியோர காட்சிகளில் ஆன்மீக சிலைகள் மற்றும் ஆலயங்கள் இருப்பது போல்
முல்லைத்தீவு நோக்கிய பாதையின் ஆரம்பமான பரந்தன் சந்தியிலும் ஒரு சிற்பத்தினை நிறுவி விடலாம் என தமிழார்வலர் சிலர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

அவர்களது கூற்றுப்படி புளியம்பொக்கணை நாகதம்பிரான் சிற்பம் ஒன்றை பரந்தன் சந்தியில் நிறுவி விடலாம்.இந்த முயற்சி பொருத்தப்பாடானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பரந்தன் சந்தியில் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்திற்கான வழிகாட்டி பெயர்ப்பலகை ஒன்று இருப்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

paranthan-junction-where-the-scene-changed

இந்த மாற்றம் பரந்தன் சந்தியை எழில் மிகு தோற்றத்தோடு தமிழ் மணம் வீசும் இடமாக சித்தரித்து A9 பாதை மற்றும் A35 பாதைவழி பயணப்படுவோருக்கு தமிழுணர்வை ஏற்படுத்தி விடுவதில் ஒருபடி முன்னேறி விடலாம் என்பது நோக்கத்தக்கது.

தமிழ் மீதும் தமிழ்த்தேசியம் மீதும் பற்றுறுதியோடு செயற்பட்டுவரும் யாரொருவரோ இது பற்றி சிந்திக்க தலைப்பட்டால் பரந்தன் சந்தியிலும் ஒரு பெரிய நாகதம்பிரான் சிற்பம் தோன்றி விடுவதை தடுத்து விட முடியாது.

தட்டுவன்கொட்டிச் சந்தியில் உள்ள நடராஜர் சிற்பம் போல் என புளியம்பொக்கணை நாகதம்பிரான் பக்தர் ஒருவருடன் இந்த சிந்தனை பற்றிய உரையாடலை மேற்கொண்டிருந்தவேளை அவர் மேற்படி பொருள்பட தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.