மன்னார் (Mannar) – இராமேஸ்வரம் (Rameswaram) நேரடி பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) கருத்து வெளியிட்டுள்ளார்.
இன்றைய (21) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையின் மன்னார் மற்றும் இந்தியாவின் தமிழ்நாட்டினுடைய இராமேஸ்வரம் இடையே நேரடி பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் திட்டம் இரண்டு நாடுகளுக்கிடையேயான பன்னாட்டு சமூக மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கை ஆகும்.
இந்த சேவை பிராந்திய இணைப்பை மேம்படுத்தி சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்கள் இடையிலான தொடர்புகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்படவுள்ளது.
முதலாவது மன்னார் மற்றும் இராமேஸ்வரம் இடையிலான நேரடி பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் திட்டம் அரசாங்கத்திற்கு உள்ளதா? இதன்மூலம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஏதும் உள்ளதா?
இந்தக் கப்பல் சேவை பொருளாதார, சமூக மற்றும் பாதுகாப்பு தாக்கங்கள் குறித்து எந்தவொரு சாத்தியக்கூறுகள் அல்லது மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?” என தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/AwQOGyH9Q2g

