புல்மோட்டை 13 ஆவது தூண் பகுதியில் வீதியோரத்தில் இலங்கையர்களுக்கு சொந்தமான ஏழு வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதன்படி, புல்மோட்டை காவல்துறையினரால் குறித்த கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கடவுச்சீட்டுக்கள் தொடர்பாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (12.11.2025) பிற்பகல் அவை மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை சந்தேகம்
இந்த கடவுச்சீட்டுக்கள் யாரோ ஒருவரால் இந்த இடத்தில் விட்டுச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்வாறு மீட்கப்பட்ட கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

