திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு நிவாரணங்களை
வழங்க கோரி மக்கள் இன்று (13) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீரற்ற காலநிலை காரணமாகவும் மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்ததாலும் பல
சேதங்கள் ஏற்பட்டன.
இதனால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணங்களை
அலுவலகத்தில் பூட்டி வைக்காது பகிருமாறும் கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டம்
குறித்த வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள் பிரதான நுழைவாயிலை
மறித்து போராடினர்.

பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வெருகல் பிரதேச
செயலக வளாகம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் கொடுப்பனவுகளை வழங்குமாறும்
குரல் எழுப்பிய மக்கள் பிரதேச செயலாளரை வெளிதே விடாது தடுத்தனர்.







