பொதுப் பணம் செலவிடப்படும் அனைத்துத் திட்டங்கள் தொடர்பான தகவல்களையும் அறிய பொதுமக்களுக்கு முழு உரிமை உண்டு என்பதை மேல்முறையீட்டு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஒரு அரசு நிறுவனத்தால் பொது நிதியைச் செலவழித்து மேற்கொள்ளப்படும் ஒரு திட்டம் தொடர்பாக, பொதுமக்கள் தகவல் கோருவதை மறுக்க எந்தவொரு அரசு நிறுவனத்தின் தலைவருக்கும் சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற சுட்டிக்காட்டியுள்ளது.
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு அத்தகைய தகவல்களை வெளியிட உத்தரவிடும்போது, அந்தத் தகவலை வெளியிடுவது கட்டாயமாக இருக்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டம்
இலங்கை தகவல் அறியும் ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொலைத்தொடர்பு நிறுவனம் தாக்கல் செய்த மூன்று மனுக்களை தள்ளுபடி செய்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை காலத்தின் கட்டாயமாகக் கருதி நிறைவேற்றியுள்ளது.
எனவே, அனைத்து அரசு நிறுவனங்களும் தகவல் ஆணைக்குழுவின் உத்தரவுகளை முறையாக செயல்படுத்தக் கடமைப்பட்டுள்ளன என்றும் தீர்ப்பு கூறுகிறது.
மேலும், பொதுப் பணம் செலவிடப்படும் அனைத்துத் திட்டங்கள் தொடர்பான தகவல்களையும் அறிய பொதுமக்களுக்கு முழு உரிமை உண்டு என்பதையும் தீர்ப்பு வலியுறுத்தியுள்ளது.
இதன்படி இந்த தகவல்களை அணுகுவதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மைல்கல் தீர்ப்பை, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ரத்னபிரிய குருசிங்க மற்றும் வைத்தியர் சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

