முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெகோ சமானை தெரிந்த அளவிற்கு இலக்கியவாதிகளை மக்களுக்கு தெரியாது

இலங்கையில் பாதாள உலக குழு உறுப்பினர்கள் தொடர்பில் தெரிந்த அளவு கூட இலக்கியவாதிகள் தொடர்பில் மக்களுக்கு தெரியவில்லை என அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இலக்கிய வாதிகள் தொடர்பிலான ஓர் தெளிவு மக்கள் மத்தியில் மிகவும் குறைந்த அளவில் காணப்படுகின்றது என அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த நவீன உலகில் சிலர் தங்களது பிம்பத்தை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் பணம் செலவிட்டு சமூக ஊடகங்களில் பதிவுகளை இட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

பெகோ சமானை தெரிந்த அளவிற்கு இலக்கியவாதிகளை மக்களுக்கு தெரியாது | People Not Know About Artist They Know Underworld

எனினும் இலக்கியவாதிகளுக்கு அந்த அங்கீகாரம் கிடைக்கப் பெறுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாதாள உலகக் குழு உறுப்பினர்களை தெரிந்த அளவிற்கு கூட மக்களுக்கு இலக்கியவாதிகளை தெரியாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கெஹல்பத்தர பத்மே போன்ற பாதாள உலகக் குழு பெருந்தலைவர்கள் அன்றி பெக்கா சமான் போன்ற சாதாரண பாதாள உலக உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் அளவிற்கேனும், ஓர் இலக்கியவாதி பற்றி இலங்கையில் மக்களுக்கு தெரியவில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

இலக்கியவாதிகள், கலைஞர்கள் அங்கீகரிக்கப்படாத ஓர் சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது எமது தனிப்பட்ட குறைபாடு அல்ல என்றாலும் இந்த சமூக கட்டமைப்பு தற்பொழுது அவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.

சக மனிதரின் உணர்வுகளை புரிந்து கொண்டு சக மனிதரின் கலாச்சாரத்தை அங்கீகரிக்க கூடிய ஓர் சமூகத்தை கட்டி எழுப்புவது இந்த அரசாங்கத்தின் இலக்காக காணப்படுகின்றது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.