கடந்த 30வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை (Keerimalai) கிருஸ்ணர் ஆலயத்தின் வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்திற்க்கு நிர்வாகத்தினரும் மக்களும் இன்று (16) செல்லவுள்ள நிலையில் பொங்கல் வழிபாடுகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகத்தினர்
தொடர்ந்தும் எதிர்வரும் வாரங்களிலும் ஒவ்வொறு வெள்ளிக் கிழமைகளிலும் வழிபாடுகளுக்கு மக்கள் செல்லமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 08மணிமுதல் மாலை 05மணி வரை ஆலயத்திற்க்கு செல்வதற்கும் சிரமதானப் பணிகளில் ஈடுடவும் அடியவர்களை கலந்து கொள்ளுமாறு நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.