புத்தளம் – வென்னப்புவவில் இன்று மாலை கடலில் நீராடச் சென்ற ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
மேலும் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.
மீட்பு பணிகள்
நான்கு பேரும் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடலில் நீராடியபோது
அவர்கள் இந்த அனர்த்தத்துக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை ஒருவரின் உடல் மாத்திரம் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மூன்று பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

