முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மரணம் : அநுர தரப்புக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(mahinda rajapaksa) ஆட்சிக்காலத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் ரக்பி வீரர் வாசிம் தாஜூடீனின் மரணம் தொடர்பான தொலைபேசி உரையாடல் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் காவல்துறை அதிகாரி அநுர சேனாநாயக்க மற்றும் ஏனையவர்களின் தொலைபேசி உரையாடல்களை வெளியிட மறுத்த டயலொக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்(Mujibur Rahman)  நாடாளுமன்றில் இன்று (04) தெரிவித்த குற்றச்சாட்டை அடுத்து, விசாரணை அதிகாரிகளுக்கு தொலைபேசி தகவல்கள் வந்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa )தெரிவித்துள்ளார்.

தொலைபேசி தரவுகளை வழங்க மறுத்த நிறுவனம்

ரக்பி வீரர் தாஜுதீன் ( Thajudeen) கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி அநுர சேனாநாயக்க(Anura Senanayake) மற்றும் பலர் செய்த தொலைபேசி அழைப்புகளின் தரவுகளை டயலொக் நிறுவனம் வழங்க மறுத்ததால், நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மகிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மரணம் : அநுர தரப்புக்கு கிடைத்த முக்கிய ஆதாரம் | Phone Conversation Data Thajudeen Death Received

எனினும், அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹன்ஸ் விஜேசூரிய, டிஜிட்டல் தொழில்நுட்ப அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார், என அவர் மேலும் தெரிவித்தார்.

தாஜுதீனின் மரணம் தொடர்பில் தேவையான தகவல்கள்

இதற்கு பதிலளித்த அரசாங்கத்தின் பிரதம கொறடா நலிந்த ஜயதிஸ்ஸ, தாஜுதீனின் மரணம் தொடர்பில் தேவையான தகவல்கள் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

தாஜுதீனின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதுடன், அதற்கு காரணமானவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வோம் என கலாநிதி ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

கலாநிதி விஜேசூரிய தன்னார்வ அடிப்படையில் பணியாற்றுவதாக அவர் கூறினார்.   

மகிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மரணம் : அநுர தரப்புக்கு கிடைத்த முக்கிய ஆதாரம் | Phone Conversation Data Thajudeen Death Received

கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி நாரஹேன்பிட்டியவில் இடம்பெற்ற விபத்தில் வசிம் தாஜூடீன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.