மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலக திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தரப்பினரால் தாக்குதல் மேற்கொண்ணப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சி அலுவலக திறப்புக்கான ஏற்பாடுகளை செய்யச்சென்ற கட்சி உறுப்பினர்களை குறித்த குழுவினர் அச்சுறுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் நேற்று(22.10.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
அலுவலக திறப்பு
அலுவலக திறப்புக்காக இடத்தினை தேர்வுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குறித்த பகுதி ஆதரவாளர்களுடன் அங்குவந்த பிள்ளையான் குழுவினை சேர்ந்தவர்கள் கொலை அச்சுறுத்தல் ஆதரவாளர்களுக்கு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிள்ளையான் கட்சியின் முக்கியஸ்தரும் மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தரான ஒருவரின் தலைமையில் வந்த குழுவினரே இந்த அச்சுறுத்தல விடுத்துள்ளனர்.
இதன்போது இது தொடர்பில் சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் முறைபாடளிக்கப்பட்டுள்ளது.