மின்சாரக் கட்டணங்களை மூன்றில் ஒரு பங்கால் குறைக்கத் திட்டங்கள் வகுக்கப்படுவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.
துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு
மின்சாரக் கட்டணங்களை மூன்றில் ஒரு பங்கு குறைக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை அரசாங்கம் மாற்றவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிசக்தி அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்டக் குழு நிலை விவாதத்தின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

