களனிவெளி தொடருந்து பாதையை அவிசாவளையில் இருந்து இரத்தினபுரி வரை நீடிக்கும்
திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது மற்றும் தொடருந்து இணைப்பை வலுப்படுத்துவது
இதன் முக்கிய நோக்கமாகும்.
சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்டத்தைத் தயாரிக்க இந்த ஒப்புதல்
வழங்கப்பட்டுள்ளது.
புதிய பாதை
ஆரம்பப் பணிகளுக்காக, 2025 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் ரூ. 250 மில்லியன்
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்கு முன் நிறுத்தப்பட்ட பழைய தொடருந்து பாதைக்கு இணையாகவே புதிய
பாதை அமைக்கப்படவுள்ளது.
இது கொழும்பு, அவிசாவளை மற்றும் இரத்தினபுரி இடையே நவீன இணைப்பை வழங்கி,
சப்ரகமுவ பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என
அரசாங்கம் தெரிவித்துள்ளது.

