ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கான அதிக செலவு காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க முடியாது என தோட்ட முதலாளிமார் சங்கம் தெரிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 30 ஆம் திகதி இரவு முதல் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தேயிலைத் தோட்ட நிறுவனங்களுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும், அந்த வர்த்தமானியை ரத்து செய்யுமாறு தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மே தின கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் தாவிய மொட்டு எம்.பி
விசேட கலந்துரையாடல்
இந்நிலையில், தேயிலைத் தோட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் கொழும்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (02) இடம்பெறவுள்ளதாகவும் அதன் பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றப்போகும் சஜித்: மே தினக் கூட்டத்தில் உறுதி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |