முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் கரையொதுங்கும் பிளாஸ்டிக் துவல்கள்: விழிப்புடன் செயல்படுமாறு அரச அதிபர் கோரிக்கை

இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியிலே விபத்திற்கு உள்ளான எம்.எஸ்.சி.எல்.எஸ்.3 என்கின்ற கப்பலில் காணப்பட்ட பிளாஸ்ரிக் துவல்கள் தற்போது எமது கடற்கரையோர பகுதிகளில் கரையொதுங்குவதினால் மக்கள் குறித்த பொருட்களை சேகரிக்காது விழிப்புடன் செயல்பட வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை கூறியுள்ளார்.

கப்பல் விபத்து

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியிலே விபத்திற்குள்ளான எம்.எஸ்.சி.எல்.எஸ்.3 என்கின்ற கப்பலானது கடந்த மாதம் 25ஆம் திகதி அன்று விபத்துக்குள்ளானது.

mannar

குறித்த கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கொள்கலன்கள் இந்து சமுத்திரத்தில் தற்போது வீசுகின்ற தென்மேல் பருவப்பெயர்ச்சி காற்றின் காரணமாக நேற்றுமுன் தினம் (12) தொடக்கம் மன்னாரில் சௌத்பார், கீரி, தாழ்வுபாடு, நடுக்குடா, பழைய பாலம், வங்காலை போன்ற கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கி வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

கரையொதுங்கும் பிளாஸ்டிக் துவல்கள் கூடுதலாக சுற்றுச்சூழல் ரீதியிலே தாக்கத்தை ஏற்படுத்துவதாக காணப்படுகின்ற நிலையில், கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில், முப்படையினரின் உதவியுடன், கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் துவல்களை சேகரிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் துவல்கள் சேகரிப்பு

தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், கடலில் மிதந்து வருகின்ற பிளாஸ்டிக் கொள்கலன் மற்றும் பிளாஸ்டிக் துவல்களை மக்கள் சேகரிப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த பொருட்கள் சூழல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மிதந்து வருகின்ற பொருட்களை மக்கள் கையாள வேண்டாம்.

mannar

குறித்த பொருட்களை அவதானித்தால் அதனை மாவட்டச் செயலக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளிடமும் தெரியப்படுத்துவதன் மூலம், நாங்கள் மிதந்து வருகின்ற பொருட்களை பாதுகாப்பான முறையில் சேகரித்துக் கொள்ள முடியும்.

எனவே மக்கள் இவ்விடயம் தொடர்பாக விழிப்புடன் செயல்பட வேண்டும். தற்போதைக்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தமக்கு அறிக்கை இடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.