இலங்கையில் (Sri Lanka) இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்காதிருக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி, அதிபர் தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க மொட்டு கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி வரும் கட்சிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் ராஜபக்சக்களின்றி தேர்தலை சந்திப்பது சிறந்தது என ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கடும் சீற்றம்
ரணில் விக்ரமசிங்கவுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், மொட்டு கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த சிறு கட்சிகளின் ஆதரவையும் ரணில் விக்ரமசிங்க தனித்தனியே பெற்றுள்ளமையும் ராஜபக்ச தரப்பை சினம் கொள்ள வைத்துள்ளது.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காதிருக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.