முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறிலங்கா காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த கான்ஸ்டபிள்!

கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் T-56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த உத்தியோகத்தர் பெப்ரவரி 08 ஆம் திகதி இரவு பணிக்குச் சென்றபோது, துப்பாக்கியையும் தோட்டாங்களையும் எடுத்து சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், அவர் பணிக்கு சமூகமளிக்கவில்லை என்றும், தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை எனவும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலதிக விசாரணை

இந்த நிலையில், நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில் சந்தேகநபரான உத்தியோகத்தர், அன்றிரவே கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றிருப்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த கான்ஸ்டபிள்! | Police Constable Takes Firearm Flees To Dubai

இவ்வாறானதொரு பின்னணியில், அந்த அதிகாரியை இலங்கைக்கு அழைத்து வர சர்வதேச காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து செயற்பட்டுவருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கி இன்னும் மீட்கப்படாத நிலையில், காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்