நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கு காவல்துறை தலைமையகத்தில் 24 மணிநேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
சுகாதார நிலையங்கள், விபத்துக்கள் மற்றும் உதவி பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
விசேட செயற்பாட்டு மையம்
அதன்படி, பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரி மூலம் காவல்துறை தலைமையகத்தை மக்கள் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி எண் – 011-2027148, 011-2472757, 011 – 2430912 மற்றும் 011-2013051
மின்னஞ்சல் முகவரி – [email protected]