முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மதுபோதையில் மாணவிகளிடம் அத்துமீறிய காவல்துறை உத்தியோகத்தர் : விதிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

முல்லைத்தீவில் (Mullaitivu) மதுபோதையில் பாடசாலைக்குள் நுழைந்து மாணவிகளிடம் முறையற்ற விதத்தில் நடந்து
கொண்ட காவல்துறை உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவு நேற்று (18) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – மல்லாவி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராகவே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டுப் போட்டி

முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலையில் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.

மதுபோதையில் மாணவிகளிடம் அத்துமீறிய காவல்துறை உத்தியோகத்தர் : விதிக்கப்பட்ட அதிரடி உத்தரவு | Police Officer Abusing Female Students Mullaitivu

மூன்று மாணவிகளுடன் இவ்வாறு தவறாக நடக்க அவர் முற்பட்டுள்ள நிலையில், மாணவிகள் குறித்த விடயத்தை வெளியே கூறியதன் பின்னர் அங்கிருந்தவர்கள் குறித்த காவல்துறை உத்தியோகத்தருடன் முரண்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் மதுபோதையில் சிவில் உடையில் புகுந்த காவல்துறை உத்தியோகத்தர், மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து தகாதமுறையில் ஈடுபட முற்பட்ட போது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

இதையடுத்து, சம்பவம் குறித்து மல்லாவி காவல் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

காவல்துறை தரப்பு 

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்ற நிலையில், மல்லாவி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என
தெரியவந்துள்ளது.

மதுபோதையில் மாணவிகளிடம் அத்துமீறிய காவல்துறை உத்தியோகத்தர் : விதிக்கப்பட்ட அதிரடி உத்தரவு | Police Officer Abusing Female Students Mullaitivu

சந்தேக நபர் நேற்று (18) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டு மார்ச் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்