முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இலஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இலஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்றையதினம் (17) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், “வழக்கு ஒன்றினை இல்லாமல் செய்வதாக கூறி, யாழ். தலைமை காவல் நிலையத்தின்
பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரின் மகன் ஒருவர் 20,000 ரூபா இலஞ்சம்
பெற்றுள்ளார்.

யாழ். நீதிவான் நீதிமன்றம்

இந்த நிலையில் இலஞ்சம் வழங்கியவர் யாழ்ப்பாணம் மாவட்ட
குற்றத்தடுப்பு காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழில் இலஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Police Officer S Son Remanded For Accepting Bribe

அந்த அடிப்படையில் குறித்த காவல்துறை அதிகாரி முல்லைத்தீவு (Mullaitivu) பகுதிக்கு இடமாற்றம்
செய்யப்பட்டதுடன் இலஞ்சம் பெற்ற நபரை கைது செய்யுமாறு யாழ். நீதிவான்
நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த சந்தேகநபர் இன்றையதினம் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில்
முன்னிலையாகினார்.

இதன்போது குறித்த சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில்
வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் – பு. கஜிந்தன் 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்