மட்டக்களப்பில் (Batticaloa) மீண்டும் காவல்துறையினர் குடியிருப்பாளர்களின் விபரம் திரட்டுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி, காவல்துறையினர் இன்றையதினம்(08.03.2025) விண்ணப்பப் படிவங்களை வீடுவீடாக சென்று வழங்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
1865ஆம் ஆண்டு 16ஆம் இலக்க காவல்துறை கட்டளைச் சட்டத்தின் 76ஆம் பிரிவிற்கமைய வீடுகளில் குடியிருப்பாளர்கள் மற்றும் தங்கி இருப்போரின் விபரங்களை பெற்றுக் கொள்வதற்கான தலைப்பிலான இந்த விண்ணப்பபடிவம் மட்டக்களப்பு நகரிலுள்ள பகுதிகளில் காவல்துறையினரால் வழங்கப்பட்டு வருகின்றது.
காவல்துறை பதிவு நடவடிக்கை
இந்நிலையில், இந்த காவல்துறை பதிவு மீண்டும் ஆரம்பித்ததையடுத்து மக்கள் மத்தியில் பெரும்
அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும்
காவல்துறை பதிவு நடவடிக்கை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.