அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
ராகமை, மேம்பாலத்தின் கீழ், கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி கார் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்து ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாமையினால் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள்
ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாரின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு விபரங்களை அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ராகமை பொலிஸ் பொறுப்பதிகாரி 071-8591604
ராகமை பொலிஸ் நிலையம் 011-2958222

