2024 டிசம்பர் 02 ஆம் திகதி முதல் மல்வானை பகுதியில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞனைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
காணாமல் போனவரின் தந்தை முறைப்பாடு
காணாமல் போனவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பியகம காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
காணாமல் போன இளைஞர் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் 071-8591600 அல்லது 0112-487574 என்ற தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.