நுவரெலியா – மஸ்கலியா தேர்தல் தொகுதியில் நோர்வுட் நியுவெளி இலக்கம் 205
வாக்களிப்பு நிலையமானது வாக்காளர்களுக்கு பல விதங்களிலும் அசெளகரியத்தை
ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியுவெளி தோட்டத்தின் பழைய தேயிலை
தொழிற்சாலையே இப்பகுதியின் வாக்களிப்பு நிலையமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்ட பொலிஸார்
தொழிற்சாலையின் மேற்பகுதியில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்த நிலையில், இரும்பிலான படிக்கட்டுகளில் வாக்காளர்கள் ஏறுவதற்கு
மிகவும் சிரமப்பட்டதையும், வயதான வாக்காளர்கள் சிலர் படிக்கப்பட்டுகளை ஏற
முடியாமல் திரும்பிச்சென்றதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்களிப்பு நிலையத்தின் உட்புறம் மிக குறுகியதாக இருப்பதால் தாம்
பணிகளை மேற்கொள்ள சிரமங்களை எதிர்கொண்டதாக மேற்படி வாக்களிப்பு நிலைய
சிரேஷ்ட தலைமை அலுவலர் உட்பட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்ட
பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.