முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையில் பயன்படுத்தப்படும் பிரபலமான வாகன வகைகளை மீண்டும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியாது என்று ஜப்பான் – இலங்கை வர்த்தக சங்கம் (Sri Lanka Japan Business Council) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் சுமார் 3 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு உரிய நிலையில் உள்ள வாகனங்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க (Jagath Ramanayake) தெரிவித்துள்ளார்.

இதன்படி, டொயோட்டா அக்வா, டொயோட்டா எக்ஸ்சியோ, டொயோட்டா பிரீமியோ, டொயோட்டா பியஸ் மற்றும் டொயோட்டா எலியோன், டொயோட்டா விட்ஸ் ஆகிய வாகனங்களை இந்த முறைமையின் கீழ் இறக்குமதி செய்ய முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வாகன இறக்குமதி

நான்கு வகை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ள போதிலும் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு | Popular Vehicle Types Cannot Be Imported Sri Lanka

இந்த நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் வாகன இறக்குமதியாளர்கள் உள்ளனர்.

இதேவேளை, தனியார் வாகனங்களையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்