அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான (Powerlifting) பளு தூக்கல் போட்டிகளில், யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் 3 பதக்கங்களைப் பெற்றிருந்தார்.
இது இலங்கை விளையாட்டுத்துறையின் பாரிய மைல்கல்லாக அமைந்ததுடன் தமிழ் வீரர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் பெற்றுதரும் முகமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்றுவரும் சர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட புசாந்தன் 3ம் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவருடைய வெற்றியை பலரும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இவரின் சாதனை பயணங்களை தொகுத்து வழங்குகின்றது லங்காசிறி…