முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு: எழுந்துள்ள குற்றச்சாட்டு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்புப் பற்றியோ ஒரு
சம்பளக் கட்டமைப்புப் பற்றியோ எவரும் கவனம் செலுத்தவில்லை என முன்பள்ளி
ஆசிரியர்களால் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரச ஊழியர்களது தபால் மூல வாக்கை இலக்கு வைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் பலர் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புப் பற்றி பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கி வரும் தம்மை புறக்கணிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியர்களால் கேள்வி

பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்க ஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு அதனுடன் வாழ்க்கைச் செலவுப் படியும் 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Pre School Teachers Salary And Allowance Issues

இந்நிலையில், பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வரும் தமக்கு வெறும் இரண்டாயிரத்து ஐந்நூறு (2,500) ரூபாய் மட்டுமே அதிகரிக்கப்படும் என ஜனாதிபதியால் குறிப்பிடப்படுவது என்ன வகையில் நியாயம் என பாதிக்கப்பட்டுள்ள முன்பள்ளி ஆசிரியர்களால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள சிறார்களுக்கு ஆரம்ப அடிப்படைக் கல்வியை வழங்குவதில் முன்பள்ளி
ஆசிரியர்கள் மிகமுக்கியமானவர்களாகக் காணப்படுகின்றபோதிலும் அவர்களை இலங்கை (srilanka) அரசு கருத்தில் எடுத்து அவர்களுக்கான ஒரு சம்பளக் கட்டமைப்பை உருவாக்கி
நாட்டிலுள்ள சிறார்களுக்கு ஆரம்ப அடிப்படைக் கல்வியை வழங்குவதற்கான பொறுப்பற்ற
நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தற்போதுவரை முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பிரதேச
செயலகங்கள் ஊடாக வெறும் மூவாயிரம் (3,000) ரூபா மட்டுமே
வழங்கப்பட்டுவருவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள முன்பள்ளி ஆசிரியர்களால் கூறிக்
கவலை தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.