முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர(Premalal Jayasekara) மற்றும் மூன்று பிரதிவாதிகளை விடுதலை செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 31) அனுமதி அளித்தது.
இந்த மனுவை இன்று(31) பரிசீலித்த பின்னர் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்த மனுவின் விசாரணை பெப்ரவரி 13, 2026 வரை ஒத்திவைக்கப்பட்டது.
தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது
பிரேமலால் ஜெயசேகர மற்றும் பிரதிவாதிகளை விடுதலை செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த மேல்முறையீடு தீர்ப்பை ரத்து செய்து, பிரதிவாதிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை மீண்டும் உறுதிப்படுத்த முயல்கின்றன.
மைத்திரி நடத்திய அரசியல் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு
2015 ஜனாதிபதித் தேர்தலின் போது கஹவத்தையில் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நடத்திய அரசியல் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சாந்த தொடங்கொட கொல்லப்பட்டது தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.