இந்த ஆசீர்வதிக்கப்பட்ட தீபாவளி நாளில், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகையின் ஒளி
குறித்த பதிவில், “ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்படும் போது, இந்த பண்டிகையின் ஒளி நம் இதயங்களில் உள்ள இருளை அகற்றி, நமது கூட்டுப்பாதையை ஒளிரச் செய்ய பிரார்த்திக்கிறோம்.
தீமைக்கு எதிரான நன்மையின் இந்த கொண்டாட்டம், போதைப்பொருள் துஷ்பிரயோகம் முதல் தீவிரவாதம் வரை நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தோற்கடிப்பதற்கான நமது அரசாங்கத்தின் உறுதியை பிரதிபலிக்கிறது.
On this blessed Deepavali, my warmest wishes to all Hindus in Sri Lanka and abroad. As lamps are lit in every home, we pray that this festival’s light dispels the darkness in our hearts and illuminates our collective path.
This celebration of good over evil mirrors our…
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) October 19, 2025
ஒவ்வொரு தனிநபரின் சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பான, நீதியான மற்றும் செழிப்பான தேசத்தை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.