மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் இந்த நிழக்வு நடைபெற்று வருகின்றது.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றையதினம் இந்தியா பயணமானார்.
வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு
இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்தநிலையில், ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.