முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

20 இலட்சம் பேருக்கு காணி உரிமை : ரணில் அளித்த வாக்குறுதி

இலவச காணி உரிமைத் திட்டத்தின் மூலம் மேலும் 20 இலட்சம் பேருக்கு காணி உரிமைகள் கிடைக்குமென அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

20 இலட்சம் இலவச காணி உறுதிகளை வழங்கும் “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் (Kurunegala) மாவட்டத்தில் தகுதி பெற்ற 73,143 பயனாளிகளில் 463 பேருக்கு அடையாள உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வானது  வடமேற்கு மாகாண கேட்போர் கூடத்தில் இன்று (05) இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரணில் இதனை தெரிவித்துள்ளார்.

உண்மையான சோசலிசம்

அத்தோடு, சிலர் சோசலிசம் பற்றி பேசினாலும் உண்மையான சோசலிசம் என்பது மக்களுக்கு இலவச காணி உரிமையை வழங்குவதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 இலட்சம் பேருக்கு காணி உரிமை : ரணில் அளித்த வாக்குறுதி | President Information On Provision Of Free Land

இந்தநிலையில், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்ட அரசாங்கம் தற்போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி வருவதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு 

கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக இருதரப்பு கடனாளர்களிடமிருந்து ஐந்து பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் மற்றும் வணிக கடன் வழங்குநர்கள் ஒப்புக்கொண்டபடி மூன்று பில்லியன் டொலர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

20 இலட்சம் பேருக்கு காணி உரிமை : ரணில் அளித்த வாக்குறுதி | President Information On Provision Of Free Land

மேலும், இதன்படி நாட்டு மக்களுக்கு எட்டு பில்லியன் டொலர் நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளதாக ரணில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்