ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றையதினம்(17.06.2025) நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
சபையில், எதிர்க்கட்சி சார்பில் 5 தமிழ் உறுப்பினர்கள் மாத்திரமே உள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
வெளிநடப்பு
இதன்போது, ஜனாதிபதி சபைக்கு வந்த நிலையில், இன்று நாங்கள் மாத்திரமே உள்ளோம் என சாணக்கியன் தெரிவித்தார்.
அத்துடன், நாங்களும் வெளிநடப்பு செய்திருந்தால் உங்களுக்கு விவாதத்தை நடத்த முடியாது போயிருக்கும் என அவர் கிண்டலாகக் கூறினார்.

