ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திருகோணமலைக்கு பயணம் மேற்கொண்டதையடுத்து முத்துநகர் விவசாயிகள், கிண்ணியா வான் எல விவசாயிகள் இணைந்து நில
அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலையில் உள்ள சீனக் குடா விமான நிலையத்தில் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (18.10.2025) வருகைத் தந்துள்ளார்.
தொடர் போராட்டம்
இந்நிலையில், திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக 32 ஆவது நாளாகவும் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட முத்துநகர் விவசாயிகளும் ஜனாதிபதியை சந்தித்து தங்களது
விவசாய நிலங்களுக்கான தீர்வை முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

மக்கள் போராட்ட முண்ணனி, அகில இலங்கை விவசாய சம்மேளனம் ஆகியன இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.













